மை டியர் பூதம் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- பிரபுதேவா, ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஷ்வத்,
மற்றும் பலர்.
இயக்கம் :- ராகவன்.
ஒளிப்பதிவு :- யு கே செந்தில்குமார்.
படத்தொகுப்பு :- ஷான் லோகேஷ்.
இசை :- இமான்.
தயாரிப்பு :- அபிஷேக் பிலிம்ஸ்.
ரேட்டிங் :- 3.25 / 5.
தமிழ் திரைப்பட உலகில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அதிகமாக வருவதே இல்லை.
எப்போதோ ஒரு முறைதான் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வரும்.
அப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சுவாரசியமான குழந்தைகள் திரைப்படமாக இந்தப் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவன்.
கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் துணையுடன் குழந்தைகள் ரசித்து மகிழும் படமாக இந்தப் திரைப்படம் இருக்கிறது.
‘மஞ்சப் பை, கடம்பன்’ ஆகிய இயக்கிய முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு இப்படி ஒரு குழந்தைகளுக்கான
திரைப்படத்தை இயக்குனர் ராகவன் கொடுத்திருப்பது ஆச்சரியம்தான்.
அவரது தாய் ரம்யா நம்பீசன் தந்தை இல்லாத குறை தெரியாமல் மகன் அஷ்வத் மீது மிகவும் பாசமாக இருக்கிறார்.
திக்கித் திக்கிப் பேசும் குறையுடயவர் மாஸ்டர் அஷ்வத்.
ஒரு நாள் மாஸ்டர் அஷ்வத்
பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் கால் தவறி ஒரு குகைக்குள் விழுந்து விடுகிறார்.
பூதங்களின் உலகில் தாய்களின் அரசனாக விளங்குபவர் கற்கிமுகி கதாநாயகன் பிரபு தேவா.
குழந்தை இல்லாத பூத உலக அரசன் கதாநாயகன் பிரபு தேவாக்கு பல வருட வேண்டுதலுக்கு பிறகு கிங்கினி என்ற ஒரு அழகான மகன் பிறக்கிறான்.
அவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்ப்பாராத விதமாக ஒரு முனிவரின் தவத்தை கலைத்து விடுகிறான்.
கற்கிமுகியின் மகன் செய்யும் தவறுக்காக அந்த சாபத்தை பூத உலக அரசன் கதாநாயகன் பிரபு தேவா
எற்று கொள்கிறார்.
இதனால் அவர் பூத உலக அரசன் கதாநாயகன் பிரபு தேவா கற்சிலையாக மாற்றி பூமியில் வீசிப்படுகிறார்.
அப்போது அங்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சித்தர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி பூமியில் சிலையாக இருக்கும் பூத உலகத்தின் தலைவர் கதாநாயகன் பிரபுதேவா கற்கிமுகியை எதிர்பாராத விதமாக தொட்டு அவரின் அந்த சாபத்தில் இருந்து உயிர் கொடுக்கிறார் மாஸ்டர் அஷ்வத்.
மாஸ்டர் ஆஷவத் கதாநாயகன் பிரபுதேவா
இருவரும் பின்னர் நண்பர்களாகி விடுகிறார்கள்.
தாயுடன் வாழ்ந்து வரும் மாஸ்டர் அஷ்வத்க்கு கதாநாயகன் பிரபுதேவா எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறார்.
48 நாட்களுக்குள் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டும்தான் கதாநாயகன் பிரபுதேவா மீண்டும் பூதலோகம் செல்ல முடியும் இல்லை என்றால் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விடுவார் என்பதுதான் சாபம்.
மாஸ்டர் அஷ்வத் எண்ணுவதை பேச்சின் மூலம் வெளிப்படுத்டுவதில் தடுமாற்றம் இருப்பதால் கதாநாயகன் பிரபுதேவாவை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கதாநாயகன் பிரபுதேவாவிற்கு உயிர் கொடுத்த மாஸ்டர் அஷ்வத் தான் அந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
திக்கிப் பேசும் மாஸ்டர் அஷ்வத் அந்த மந்திரத்தை சொன்னாரா? சொல்லவில்லையா? கதாநாயகன் பிரபுதேவா மீண்டும் பூத லோகம் சென்றாரா? சொல்லவில்லையா? என்பதுதான் இந்த மைடியர் பூதம் திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த மைடியர் பூதம் திரைப்படத்தில் பூதமாக பிரபுதேவா நடித்திருக்கிறார்.
ஆக்ஷன், நடனம் என அசத்திய பிரபுதேவா ஒரு குழந்தைகளுகககான திரைப்படத்தில் பூதலோகத்தின் தலைவனாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
தலையை முழுவதுமாக மொட்டைய அடித்து உச்சந்தலையில் ஒரு நீளமான குடுமியுடன், வித்தியாசமான ஆடையுடன் குழந்தைகளைக் கவரும் விதத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார்.
குழந்தைகளை கவரும் வகையில் காமெடி கலந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரபு தேவா, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் அஷ்வத்.
இந்த திரைப்படத்தில் அவருடைய மாஸ்டர் அஷ்வத் நடிப்புதான் திரைப்படத்திற்குப் மிக பெரிய பலம்.
திக்கித் திக்கிப் பேசி அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார் மாஸ்டர் அஷ்வத்.
மற்ற சிறுவர்களைப் போல தன்னால் இருக்க முடியவில்லையே என மாஸ்டர் அஸ்வத் அவர் கலங்கும் போது திரைப்படம் பார்க்கும் நாமும் கலங்கிவிடுவோம்.
மற்றொரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மாஸ்டர் அஷ்வந்த் அவனின் குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் படியும் ரசிக்க வைக்கும் படியும் உள்ளது.
கதாநாயகன் பிரபுதேவாவிற்கும் மாஸ்டர் அஷ்வத்திற்கும் இடையில் நட்பு என்பதைக் கடந்து ஒரு தந்தை மகன் பாசம் போல அமைந்து நெகிழ வைக்கிறது.
கதாநாயகி ரம்யா நம்பீசன் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
இன்றைய முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பாதாற்க்கு.
அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காகவே இருப்பவர் ரம்யா நம்பீசன்.
வழக்கம் போல அவரும் இந்தப் படத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் சம்யுக்தா டீச்சராக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது.
கதாநாயகன் பிரபுதேவா, மாஸ்டர் அஷ்வத் இருவரை சுற்றியேதான் மொத்த திரைப்படமும் அமைந்துள்ளது.
டி.இமானின் பாடல்கள் அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது.
இந்த பாடல்கள் குழந்தைகள் கொண்டாடும் வகையில் வடிவமைத்து பாராட்டை பெற்றுள்ளார்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது.
குழந்தைகளை இலக்காக கொண்டு மை டியர் பூதம் திரைப்படத்தை இயக்கி அதில் சிறந்து விளங்கி இருக்கிறார் இயக்குனர் என்.ராகவன்.
கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ் ஆகியவற்றை இன்னும் தரமாக அமைத்திருக்கலாம்.
ஒரு டிவி தொடருக்கு செலவு செய்வதைப் போலத்தான் செலவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது.
இப்படி இன்னும் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தைக் கொடுக்க முன் வந்த குழுவினரைப் பாராட்டலாம்.
மொத்ததில் ‘மை டியர் பூதம்’ திரைப்படம் குழந்தைகளின் திரைப்படம்.











