நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைப்பு
ஜியோ ஸ்டுடியோஸ் & குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மதன் கார்க்கி எழுத்தில், நடன இயக்குனர் பிருந்தா இயக்க, துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹே சினாமிகா’ திரைப்பட படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பால், பெப்சி மற்றும் அரசாங்க அறிவுறுத்தலுக்கு இணங்க, படப்பிடிப்பு வேலைகள் நாளை 19ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியும், பாதிப்படைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும், அரசாங்கம் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படியும் நடக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் பெப்சி மற்றும் அரசாங்க அனுமதியுடன் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.











