ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்தப்படும் இயக்குனர் ஷங்கர்!
சென்னை 26 ஆகஸ்ட் 2022 ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்தப்படும் இயக்குனர் ஷங்கர்!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘இந்தியன்-2’.
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படம் இயக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.
அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது.
பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன்பின் ஷங்கரும், உலகநாயகன் கமல்ஹாசனும் வெவ்வேறு திரைப்படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.
இயக்குனர் ஷங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு “ஆர்.சி.15” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஆர் சி 15 அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்ததற்குள் தெலுங்கு திரைப்பட உலகில் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சமீபத்தில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஆர்.சி.15 மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடைபெறும்.
ஆர்.சி.15 திரைப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi Everyone, Indian 2 and #RC15 will be shot simultaneously. Ready to shoot the next schedule of #RC15 from first week of September in Hyderabad and Vizag! @DilRajuOfficial @AlwaysRamCharan @SVC_official. pic.twitter.com/20yYQGxIgE
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 24, 2022











