நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் இணைகிறார் பிரபல நடிகை*

பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் ‘எல்.கே.ஜி’ படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினார். இந்நிலையில் இவர் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு ‘முக்குத்தி அம்மன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.