நடிகர் கமல்ஹாசன் 60′ சிறப்பிக்கும் வகையில் இசைஞானியின் இசை நிகழ்ச்சி*

திரைத்துறையின் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் கடந்தும் முத்திரை பதித்து வருகிறார். இவரின் சாதனையை கொண்டாடும் விதமாக இசை ஞானி இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை விஜய் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் செய்துள்ளது.