நடிகர் சிபிராஜின் மகன் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை ! *

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ், பூஜா குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிபிராஜ் மகன் தீரன், தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ என்ற தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை பெற்றுள்ளதாகவும், இந்த சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.