நடிகர் மாதவன் அடுத்த படத்தின் லுக் குறித்த தகவல் !

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘விக்ரம் வேதா’ வெற்றி படத்திற்கு பின் நடிகர் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்’ மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘நிசப்தம்’ திரைப்படத்தில் மாதவன் ‘அந்தோணி’ என்ற இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.