நடிகர் விஜய் ஆண்டனி & நடிகை ரித்திகா சிங் ஜோடியை சேர்க்கும் முன்று திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள்.

தமிழரசன் அக்னி சிறகுகள், பிச்சைக்காரன் 2′ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

இத்துடன் மேலும் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளாராம்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி கே.குமார் என்பவர் இயக்க உள்ளார்.

இவர் பூஜா நடித்த ‘விடியும் முன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்த திரைப்படத்தை மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ திரைப்பட மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகை ரித்திகா சிங் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!