நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் – தமன்னா
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த ‘தேவி + 2’ படம் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், தமன்னாவின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். முதன் முறையாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தமன்னா நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்காக படம் வெளியாவதற்கு முன்தினம்தான் படத்திற்கான பிரமோஷன் பேட்டிகளைக் கொடுத்தார்கள் படக்குழுவினர். அவையெல்லாம் பட வெளியீட்டிற்குப் பின்னர்தான் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அப்படி தந்த ஒரு பேட்டியில் தமன்னா அவருடைய திருமணம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில், “முதலில் திருமணத்திற்காக ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். இப்படத்தின் இயக்குனர் விஜய்யிடம் கூட யாராவது பொருத்தமானவர் இருந்தால் சொல்லுங்கள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்,” என்றார்.
ஏற்கெனவே, ஆர்யா – சாயிஷா திருமணத்தை முன்னின்று நடத்தி முடித்தவர் இயக்குனர் விஜய். ஒருவேளை அதனால்தான் தமன்னா, விஜய்யிடம் நல்ல மாப்பிள்ளை இருந்தால் பாருங்கள் என்று சொல்லியிருப்பாரோ….?.