நான் கற்பனையாக பேசவில்லை நான் மன்னிப்பு கேட்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையானது.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினிகாந்த் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் ரஜினிகாந்த்

அவர் பேசியதாவது…

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.

1971ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை.

பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன்.” என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன். என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்