நடிகர் ரஜினிகாந்த் ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற டெல்லி செல்கிறார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை 25 அக்டோபர் 2021 நடிகர் ரஜினிகாந்த் ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற டெல்லி செல்கிறார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

ரஜினியை தலைவா என குறிப்பிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தும் நண்பன், அண்ணன், குரு முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய திரைப்பட உலகிற்கு உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

இவர்களின் வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது பெற சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி செல்கிறார்.

இதனையொட்டி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இந்த விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த நேரத்தில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் சார் இல்லாதது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

இந்த விருது வாங்கிய பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

https://twitter.com/rajinikanth/status/1452143431145254915?t=mG9kUgBtH3ARB02VTeDcbQ&s=19