நியூயார்க்’கில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் பிரபல தயாரிப்பாளர்*
நடிகை நயன்தாரா அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், இருவரும் நியூயார்க் சென்றுள்ளனர், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கூடவே அஜித்தின் 60வது பட தயாரிப்பாளரான போனி கபூரும் தனது இரண்டாவது மகள் குஷி கபூருடன் நியூயார்க்கில் இருந்துள்ளார். நடிகை நயன்தாரா, தயாரிப்பாளர் போனி கபூர் எதர்ச்சையாக சந்திக்க அவர்கள் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பரவி வருகிறது.











