Thursday, July 29
Shadow

தனி விமானத்தில் தனது காதலியான நயன்தாராவை தாங்கி கொண்டு பறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்.

சென்னை 18 ஜூன் 2021

தனி விமானத்தில் தனது காதலியான நயன்தாராவை தாங்கி கொண்டு பறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம் கொச்சின் படப்பிடிப்பிற்காக சென்றபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தனது நீண்ட நாள் காதலி நடிகை நயன்தாராவுடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

நெற்றிக்கண், கூழாங்கல், ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் நயன்தாராவை ‘என் தங்கமே’ என்று செல்லமாக அழைப்பதுண்டு.

இந்த காதல் பறவைகள் அடிக்கடி பாரீன் பறப்பதுண்டு.

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்கின்றனர்.

இந்த நிலையில் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு திரைப்பட படப்பிடிப்புகாக பறந்துள்ளனர்.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘பாட்டு’ என்ற திரைப்படத்தில் பத்து பாசிலுடன் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

இதற்காக தான் தனது காதலன் விக்னேஷ் சிவனையும் அழைத்து சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

தனி விமானத்தில் சென்ற இவர்கள் கொச்சியில் தரை இறங்கிய போது எடுத்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தனது காதலி நடிகை நயன்தாரா விமானப் படிகளில் இறங்கி வரும்போது தாங்கி பிடித்து அவர் இறங்க உதவி செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

.