பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்க்கு அழைப்பு

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று பதவியேற்கவுள்ளார். முன்னதாக, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருந்தார். இந்த நிலையில் வரும் 30ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில் விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.