தமிழகத்தை வளமான மாநிலமாக்கி பெறும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என முக ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.
சென்னை 02 மே 2021
தமிழகத்தை வளமான மாநிலமாக்கி பெறும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என முக ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் 6வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர் ஆகிறார்.
இந்த நிலையில், அந்த கட்சியின் தலைவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல், தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்தியுள்ளார்.
“சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் அன்பு நண்பர் மதிப்பிற்குரிய ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக்கி பெறும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்
— Rajinikanth (@rajinikanth) May 2, 2021











