பிரபல இயக்குனர் வைரலாக்கிய ரஜினிகாந்த்-லதா புகைப்படம்

இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண்ஜோஹர், பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு வந்த பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த், லதா உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/karanjohar/status/1134371338901106688?s=19