பிரபல கமொடி நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

பிரபல காமெடி நடிகர் பாலா சரவணன் நரைத்த முடி, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து  ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த சமயத்தில் சலூன்கள் மூடப்பட்டதால்,

தங்களை அழகு படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகர், நடிகைகள் சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாமல் தவித்து வந்தனர். சிலரோ வீட்டிலேயே முடி வெட்டிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பால சரவணன் தான் நரைத்த முடி, தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் கெட்-அப்பில் இருக்கும் அவரின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அவர் இந்த கெட்-அப்பில் விஜய் மல்லையா போல இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். சிலரோ அவர் பார்க்க ஹாலிவுட் நடிகர் போல இருப்பதாக கூறுகின்றனர்.

இயக்குனர் முத்தய்யா இயக்கியுள்ள நடிகர் இயக்குனர் சசிகுமார் நடித்த குட்டிப்புலி திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் பால சரவணன்.

பின்னர் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், வேதாளம், ராஜா மந்திரி, டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.

https://twitter.com/Bala_actor/status/1264994031479615488?s=19