பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ! *
தமிழில் நடிகர் விஷாலின் நடித்த ‘திமிரு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, விநாயகன் மீது மீடூ-வில் பாலியல் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.