நடிகர் விமலின் கொடுத்த புகாரால் தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை 28 ஆகஸ்ட் 2021

நடிகர் விமலின் கொடுத்த புகாரால் தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் உள்பட மூன்று பேர்களின் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘மன்னர் வகையறா’ என்ற திரைப்படத்தின் தயாரித்த
நடிகர் விமல் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகச் சொல்லி தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

ஆனால் நடிகர் விமல் கொடுத்த புகார் மீது மேல் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நடிகர் விமல் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நடிகர் விமல் மூன்று தயாரிப்பாளர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் ஆகிய மூன்று
பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘மன்னர் வகையறா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நானே தயாரித்தேன்.

இந்த மன்னர் வகையறா திரைப்படத்தில் பணப் பிரச்னை காரணமாக அந்தப் திரைப்படத்தை தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன்.

பைனான்சியர்களான சிங்காரவேலன், கோபி ஆகியோர் இந்த மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

பைனான்சியர்களான சிங்காரவேலன், கோபி ஆகியோர் நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

இந்த நிலையில் திரைப்படத்தை தயாரிக்க மூன்று கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் நான்கு கோடி ரூபாய் கிடைத்ததாகவும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார்.

அந்த நான்கு கோடி ரூபாய் பணமும் நீங்கள் கடனாக வாங்கிய மூன்று கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்கு சரியாகி விட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார்.

நான் வாங்கிய அசல் மூன்று கோடி ரூபாய் பணத்துக்காக எதிர்வரும் காலத்தில் திரைப்படங்கள் நடித்து சம்பளத்தின் மூலமாக கொடுத்து இருக்கிறேன்.

இதனிடையே ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை விற்பனை செய்ததில் எட்டு கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்னை மோசடி செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளனர் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர்கள் மூன்று பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த இந்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடிகர் விமல் அதன்பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி விக்னேஷ் ஆகியோர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவைப் பெற்றார்.

அதன் பிறகு தற்போதுதான் விருகம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் உள்ளிட்ட மூவரும் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!