பெண்களுக்கு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது நான் தான். நடிகர் சிம்பு
அண்மையில் நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு பட சூட்டிங் தொடங்கியது..
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் நடிகர் சிம்பு.
அப்போது அவர் பேசியதாவது,
“யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் சொல்வது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.
கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுங்கள்.
நம்மைப் பலர் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம்.
பிரச்னை இல்லையெனில் வாழ்க்கையே இல்லை.
எல்லோரும் இவன் வேண்டாம். இவன் கெட்டவன் என்று என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள்.
என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது.??
நீங்கள் இப்படி கை தட்டி ஏற்றிவிடுவதால் என்னை தேவையில்லாமல் சிலர் சீண்டுகிறார்கள். ரொம்ப ஓவரா பண்றாங்க..
நீங்கள் இப்படி கை தட்டி ஆதரவு கொடுப்பதால் என்னை சீண்டுபவர்களுக்கு கோபம் வரும்.
நடிகர் சிம்பு பெண்களுக்கு எதிரானவர் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண்கள் தான் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது நான் தான். பெண்களுக்கு பிரச்னை தருபவர்களை சும்மா விடமாட்டேன்..
நடிகர் சிம்பு ரசிகர்களை பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு காதலிக்கலாம். என்னை பலரும் கழுவி கண்ணா பிண்ணா திட்டிய போதே என்னை விட்டு செல்லாதவர்கள் என் ரசிகர்கள்.
அவர்களை நீங்கள் காதலித்தால் எந்த காலத்திலும் காதலியை/ மனைவியை விட மாட்டார்கள்..
இவ்வாறு மாணவ & மாணவிகள் மத்தியில் பேசினார் நடிகர் சிம்பு.
இவருடன் நடிகர் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் கலந்துக் கொண்டார்.