நடிகர் சிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது?
நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு வரவில்லை என்று புகார்
நடிகர் சிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் நடிகர் “சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. இதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது.
முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.











