பேச்சுலர் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – ஜி வி பிரகாஷ் குமார், திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவதி பெருமாள், மிஸ்கின்,
மற்றும் பலர்.
தயாரிப்பு – ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி.
இயக்கம் – சதீஷ் செல்வகுமார்.
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்.
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்.
.
இசை – சித்துக்குமார்
திரைப்படம் வெளியான தேதி – 03 டிசம்பர் 2021
ரேட்டிங் –3.5 /5
சமீபகாலமாக தமிழ் திரைப்பட உலகில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து இந்த பேச்சிலர் திரைப்படம் எந்த அளவிற்கு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என தெரியவில்லை.
பேச்சிலராக இருக்கும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் தன்னை சுற்றி எது நடந்தாலும், தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும், கொஞ்சம் கூட அதனை பற்றி கவலை படாத மனநிலை உடையவராக இருக்கிறார்.
எந்த ஒரு விஷயத்தையும் பெரிதும் கண்டுகொள்ளாத கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் முதல் முறையாக கதாநாயகி திவ்யபாரதி சந்திக்கும் பொழுது, அவருக்குள் தீடீரென மாற்றம் ஏற்படுகிறது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக செல்லும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார்.
தனது நெருங்கிய நண்பனின் உதவியோடு கதாநாயகி திவ்யபாரதி ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார்.
இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் வேலை செய்வதனாலும் நெருங்கிய நண்பனின் சிபாரிசினாலும் கதாநாயகி திவ்யா பாரதியுடன் ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார்.
கதாநாயகி திவ்யபாரதி ஒரே வீட்டில் தங்குவதற்கு ஓகே சொல்ல, இருவரும் ஒரு வீட்டில் தங்கிக் கொள்கிறார்கள்.
நாட்கள் செல்ல செல்ல நகர்கிறது இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள், காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால், ஜி.வி. பிரகாஷ் குமார் மட்டும் இதனை காதல் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு கட்டத்தில் இருவரும் எல்லை மீறுகிறார்கள்.
அதன்பின் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இருவருக்கும் இடையே ஏற்படும் நெருக்கமே அவர்களின் பிரிவுக்கு காரணமாகிறது.
பிரிவுக்கு பின் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிலிருந்து தொடர்ந்து நடக்கும் அணைத்து விஷயங்களையும், இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள்.
இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த பேச்சிலர் திரைப்படத்தின் மீதிக்கதை.
பலவிதமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜி வி பிரகாஷ் குமார்.
வழக்கம் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை பேச்சிலர் திரைப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
தன்னை சுற்றி எது நடந்தாலும் சரி, தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி கொஞ்சம் கூட கவலைப் படாத கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
அந்த வரிசையில் பேச்சிலர் திரைப்படத்தில்
இவருடைய அலட்டல் இல்லாத அசால்டான நடிப்பு ரசிக்க வைக்கிறது ஜிவி பிரகாஷ் குமார்.
அறிமுக கதாநாயகி, நடிகை திவ்யபாரதி முதல் படத்திலேயே மிகவும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் படத்திலேயே எதார்த்தனமான நடிப்பை காட்டியுள்ள திவ்யபாரதிக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் திரைப்பட உலகில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால்
இந்த கதாநாயகி திவ்யபாரதிக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.
பகவதி பெருமாள் , முனிஷ்காந்த் மற்றும் அருணின் நடிப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மேலும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் நண்பர்களாக வரும் அனைவரும் காட்சிகளுடன் ஒன்றிப்போகிறார்கள்.
கதாநாயகன் ஜிவி பிரகாஷ் தன் நண்பர்களுடன் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது.
கதாநாயகனின் அம்மா மற்றும் அக்காவாக வரும் இருவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.
மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் சதீஸ் செல்வகுமார் தேர்ந்தெடுத்து கொண்ட கதைக்களம் மிகவும் அருமை.
அறிமுக இயக்குனர் சக்தி செல்வகுமார் பேச்சிலரின் வாழ்க்கையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
கதைக்கு ஏற்றார்போல் கதாபாத்திரங்களையும் அருமையாக தேர்ந்தெடுத்து இருப்பது திரைப்படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் ஏற்றாற்போல் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியையும் எதார்த்ததுடன் எடுத்துள்ளார்.
கதை, வசனம், இயக்கம் அனைத்தையும் சரியாக எடுத்து சென்று இயக்குனர் சதீஸ் செல்வகுமார்.
அடல்ட் திரைப்படமாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியையும், திரைப்படம் பார்ப்பவரின் முகம் சுளிக்காத வகையில் கையாண்டுள்ளார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
அதற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும் தனி பாராட்டு.
சான் லோகேஷின் எடிட்டிங் சூப்பர்.
சித்து குமாரின் பின்னணி இசையின் சூப்பர்.
எ.எச். காஷிப், திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் என மூவர் இசையமைத்துள்ள ஒவ்வொரு பாடல்களும் ஓகே.
மொத்தத்தில் ‘பேச்சிலர்’ திரைப்படம். பார்க்கலாம்.
மொத்தத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார் இந்த பேச்சிலர் திரைப்படம்.











