Thursday, December 9
Shadow

Oh மணப்பெண்ணே திரை விமர்சனம். ரேட்டிங் – 4 /5

நடிகர் நடிகைகள் – ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், அன்புதாசன், அபிஷேக் குமார், அஸ்வின் குமார், வேணு அரவிந்த், கே.ஏஸ.ஜி. வெங்கடேஷ், அனிஷ் குருவில்லா, தாரணி, சம்யுக்தா விசுவநாதன், அப்துல் லீ, சித்தாந்த சாவ்கர், மற்றும் பலர்.

தயாரிப்பு – எ ஸ்டுடியோஸ் எல்எல்பி, ஹவிஷ் புரோடக்சன்ஸ், எஸ்பி சினிமாஸ், மாதவ் மீடியா, மூன்றாம் கண் என்டர்டைன்மென்ட்.

இயக்கம் –  கார்த்திக் சுந்தர்..

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்.

படத்தொகுப்பு – கிருபாகரன்.

இசை – விஷால் சந்திரசேகர்.

திரைப்படம் ஒடிடியில் வெளியான தேதி – 22 அக்டோபர் 2021

ரேட்டிங் – 4 /5

நடிகர் இயக்குநர் பாண்டியராஜன், நடிகர் பாண்டியன் நடிகைகள் ரேவதி, சீதா நடிப்பில் 1985ல் வெளிவந்த ஆண் பாவம் திரைப்படம்தான் இந்த தெலுங்கு பெல்லி சூப்புலு திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும்.

தெலுங்கு திரைப்பட உலகில் நடிகர் விஜய் தேவரகொன்டா, நடிகை ரிதுவர்மா நடித்து பெல்லி சூப்புலு 29 ஜூலை 2016 ஆம் ஆண்டு வெளி வந்து தெலுங்கு திரைப்பட உலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

தமிழ் திரைப்பட உலகில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஒ
மணப்பெண்ணேவாக இந்த
பெல்லி சூப்புலு திரைப்படம்
மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

இந்த பெல்லி சூப்புலு திரைப்படத்தை மலையாளம் மற்றும் ஹிந்தில் ஏற்கெனவே மொழி மாற்றம் செய்துவிட்டார்கள்.

தமிழ் திரைப்பட உலகிற்கு ஐந்து வருடங்கள் கழித்து மொழிமாற்றம் செய்யப்பட்டு அமேசன் பிரைம் ஓடிடி இனையத்தளத்தில் அக்டோபர் 22ஆம் தேதி வெளியாகி உள்ளது.

அரியர்களுடன் தேர்வு எழுதி இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் விஐபி ஆக இருக்கும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடி புகை என ஊர் சுற்றி கொண்டிருக்கிறார் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்குப பிறகுதான் நல்ல வேலை அமையும் என கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் தந்தையிடம் ஜோசியம் கூறுகிறார்.

ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க முதலீடு தேவை என்பதால் திருமணம் செய்து கொண்டால் வரதட்சணை கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு செட்டிலாகி விடலாம் என்று கதாநாயகி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் குடும்பத்துடன் செல்கிறார்கள்.

கதாநாயகி பிரியா பவானி சங்கர் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் எதிர்பாராத விதமாக கதாநாயகி பிரியா பவானி சங்கர் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் இருவரும் அந்த அறையில் சிக்கிக் கொள்கின்றனர்.

Read Also  தேவ் விமர்சனம்

அப்போது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் கதவை திறக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் அந்த நேரத்தில் இருவரும் அங்கேயே இருவரும் அமர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசிக்கொள்கின்றனர்.

அதில் இருவருக்குமே தங்களை பற்றியும் தங்கள் முன்னாள் எப்படி காதல் முறிந்தது பற்றியும் தங்களின் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் பேசி முடித்த பின்னர் தவறுதலாக வீட்டு அட்ரஸ் மாறி கதாநாயகி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வந்த விஷயம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு தெரிய வருகிறது.

அவர் பார்க்க வேண்டிய உண்மையான மணப்பெண்ணை பார்க்க சென்றாரா? இல்லையா ? கதாநாயகி பிரியா பவானி சங்கரை திருமணம் செய்தாரா? திருமணம் செய்ய வில்லையா ? கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு ஓட்டல் ஆரம்பித்து வாழ்க்கையில் கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதுதான் மணப்பெண்ணே திரைப்படத்தின் மீதிக்கதை.

Oh மணப்பெண்ணே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அருமையாக நடித்திருக்கிறார்.

வேலை வெட்டி எதுவும் இல்லாத மற்றும்
பொறுப்பில்லாத இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் இன்றைய சில பல இளைஞர்களை கண்முன் நடிப்பில் நிறுத்தி இருக்கிறார்.

இநத Oh மணப்பெண்ணே திரைப்படத்தில்
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் நேர்த்தியான நடிப்பை மிக அருமையாக கொடுத்து இருக்கிறார்.

கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கும் பொருத்தமான ஒரு கதாபாத்திரம். எம்பிஏ கோல்டு மேடலிஸ்ட் முடித்த ஒரு மெச்சூர்டு பெண்ணாக அமைதியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

அவருடைய ஆர்பாட்டமில்லாத அடக்கமான நடிப்பு அவரைப் பற்றியும் பேச வைக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கரின் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி செமையாக சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் டல்லாக தெரிகிறார் கதாநாயகி பிரியா பவானி ஷங்கர்.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் ஆரம்ப காட்சியே அசத்தல்தான். கொஞ்சம் நேரமே என்றாலும் பெண்களை கவர்ந்துவிடுவார்.

அஸ்வின் குமார் வரும் காட்சிகளும் பெண்களின் கண்களுக்கு குளிர்ச்சி தான்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தந்தையாக வரும் வேனு அரவிந்த் நல்ல மிகையில்லாத நடிப்பு. அதுபோல கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரின் நடிப்ப்ம் படம் பார்க்கும் நமது கவனம் ஈர்க்கும்.

கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக வரும் அன்புதாசன் மற்றும் அபிஷேக் குமார் இருவரும் திரைப்படத்தின் கதையோட்டத்துக்கு தேவையான அளவிற்கு காமெடியை அள்ளி அளவாக தெளித்திருக்கிறார்கள்.

Read Also  ₹ 2000 திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5.

மற்ற அனைத்து கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள்.

தெலுங்கு திரைப்பட உலகில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட பெல்லி சுப்பலு என்ற திரைப்படத்தை தமிழ் திரைப்பட உலகிற்கு ஏற்றவாறு மாற்றி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர்.

இந்த காலத்திலும் ஜோதிடம் சாஸ்திரம் போன்றவற்றை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ். மேலும், வரதட்சணை குறித்தும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்.

ஒரு திரைப்படத்திற்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்வதுதான்.

ஆனால் இந்த Oh மணப்பெண்ணே திரைப்படத்தின் முதல் பிளஸ் இந்த திரைப்படத்தின் நடிகர் நடிகைகளின் தேர்வு மிகவும் அருமை.

இசையமைப்பாளர்களில் விஷால் சந்திரசேகர் கவனிக்க வேண்டிய ஒருவர்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் அருமை.

பாடல்கள் ஒரு சில பழைய பாடல்களை ஞாபகப்படுத்தினாலும் பின்னணி இசையில் எப்போது, எங்கு இசைக்க வேண்டுமோ அங்கு இசைத்து படத்தின் உணர்வை நம்முள் கூடுதலாகக் கடத்துகிறார்.

நல்ல படங்கள் அமைந்தால் முன்னணிக்கு வர அத்தனை தகுதிகளும் உள்ளது.

அனிருத் மற்றும் ஷாஷா திருப்பதி பாடிய ‘போதை கணமே…’ இனி காதலர்களின் காலர் டியூனாக மாறும்.

ஒளிப்பதிவாளர்கள் என்றாலே பொதுவாக கதாநாயகிகளை தனியாகக் கவனித்து ஒளிப்பதிவு செய்வார்கள்.

காதல் ரொமான்ஸ் படம் என்றால் எந்த ஒளிப்பதிவாளர் என்றாலும் அதை ரசிக்க வைக்க வகையில் சிறப்பாக படம் பிடித்து விடுகின்றனர்.

இதிலும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் அதை சிறப்பாக செய்துள்ளார். அவரது ஒளிப்பதிவில் காட்சிகள் மிக சிறப்பு. எடிட்டர் கிருபாகரனும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.

காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் திரைப்படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர்.

எந்த காட்சிகளும் பெரிதாக போரடிக்கவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருப்தியான காதல் திரைப்படத்தைப் பார்த்த மகிழ்ச்சி.

இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இந்தப் திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும்.

ஆக மொத்தத்தில் இந்த
Oh மணப்பெண்ணே திரைப்படம் அழகான காதல் இல்லாத காதல் கதை.

CLOSE
CLOSE