ஜாங்கோ திரை விமர்சனம் ரேட்டிங் –3./5

நடிகர் நடிகைகள் – சதீஷ் குமார், மிருநாளினி, கருணாகரன், ரமேஷ் திலக், தீபா ஷங்கர், அனிதா சம்பத்,
வேலு பிரபாகரன், ஹரிஷ் பராரி, மற்றும் பலர்.

தயாரிப்பு – திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்.

இயக்கம் –  மனோ கார்த்திகேயன்.

ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை.

படத்தொகுப்பு – சான் லோகேஷ்.

இசை – ஜிப்ரான்.

திரைப்படம் வெளியான தேதி – 19 நவம்பர் 2021

ரேட்டிங் –3./5

தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான திரைப்படங்கள் வந்தால் லாஜிக் இல்லை, இப்படியெல்லாம் நடக்குமா என கேட்பார்கள்.

சினிமாவே லாஜிக் இல்லா மேஜிக் என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமான கதைக்களத்துடன் திரைப்படங்கள் ஏதாவது இருக்கிறதா என இணையதளங்களிலும்
ரசிகர்கள் தேடித் தேடிப் பார்ப்பார்கள்.

சயின்ஸ் பிக்ஷன் என்றாலே அது கற்பனைக்கும் அப்பாற்பட்ட திரைப்படம் தான்.

சயின்ஸ் பிக்ஷன் மாதிரியான திரைப்படங்களை ஹாலிவுட்டில்தான் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறோம்.

சமீப காலமாக அவை தமிழ் திரைப்பட உலகில் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள திரைப்படம் தான் இந்த ஜாங்கோ.

டைம் லூப் என்ற அடிப்படையில் இந்தியாவில் வந்துள்ள முதல் திரைப்படம்தான் இந்த ஜாங்கோ திரைப்படம்.

கதாநாயகன் சதீஷ்குமார் மூளை அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த டாக்டராக இருக்கிறார்.

டிவியில் தொகுப்பாளராக வேலை பார்க்கும் கதாநாயகி மிர்னாளினி ரவியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

இருவரும் சிறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

கதாநாயகன் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார்.

இதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாற்றிக் கொள்கிறார் கதாநாயகன் சதீஷ்குமார்.

அதாவது, அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறார் கதாநாயகன் சதீஷ்குமார்.

இந்நிலையில் மனைவி கதாநாயகி மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள்.

இதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகன் சதீஷ்குமார் தனது மனைவி கதாநாயகி மிருணாளினி ரவியை காப்பாற்றினாரா? இல்லையா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதுதான் இந்த ஜாங்கோ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார்.

முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

அறிமுகம் ஆன முதல் திரைப்படத்திலேயே கதாநாயகன் சதீஷ்குமார் இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது ஆச்சரியம் தான்.

முடிந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.

திரைப்படம் பார்க்கும் நமக்கே சில காட்சிகளில் குழப்பம் ஏற்படுகிறது.

Read Also  அன்பிற்கினியாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 3.75 /5

ஆனால், அவற்றை நடிக்கும் போது புரிந்து கொண்டு நடிப்பது அவ்வளவு எளிதல்ல.

அவரது கதாபாத்திரத்தை ஏற்றவாறு நடிப்பையும் சரியாகச் செய்திருக்கிறார் கதாநாயகன் சதீஷ்குமார்.

சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் மிக அருமையாக பளிச்சிடுகிறார்.

கதாநாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார்

காவல்துறை அதிகாரியாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன்.

முதல் பாதி திரைக்கதை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவு படுத்துகிறார்.

இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன்.

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் முதல் படத்திலேயே சிக்கலுக்குரிய கதையை எடுத்துக் கொண்டு அது சாமானிய ரசிகனுக்கும் புரியும் விதத்தில் சிக்கல் இல்லாமல் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

இம்மாதிரியான கதைகளை எழுதி, அதை திரையில் காட்சிகளாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் புரிய வைக்க வேண்டும், திரைக்கதையிலும் சுவாரசியம் இருக்க வேண்டும்.

இந்த கதையை ஒரு முதல் திரைப்படத்தில் அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் செய்ததற்காகக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

லிரைப்படத்தில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களில் எடிட்டர் சான் லோகேஷுக்குத்தான் நிறைய வேலை.

மொத்தத்தில் ‘ஜாங்கோ’ திரைப்படம் பது விதமான முயற்சி.