பேய் இருக்க பயமேன்’ திரை விமர்சனம்.ரேட்டிங் – 3./5

நடிகர் நடிகைகள் – கார்த்தீஸ்வரன்,காயத்ரி ரமா, அர்ஜுன், நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா, அபிராம்

தயாரிப்பு – திலகா ஆட்ஸ்

இயக்கம் – சீ.கார்த்தீஸ்வரன்

ஒளிப்பதிவு – அபிமன்யு

படத்தொகுப்பு – GP கார்த்திக் ராஜா

இசை – ஜோஸ் பிராங்கிளின்

மக்கள் தொடர்பு – அனந்த

திரைப்படம் வெளியான தேதி – 01 ஜனவரி 2021

ரேட்டிங் – 3./5

தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவு பேய் படங்கள் வந்தாலும் ஒரு சில படங்களை மட்டுமே கூறலாம்.

தமிழ் திரையுலகில் ஏராளமான காதல், ஆக்ஷன், காமெடி திரைப்படங்கள் வந்தாலும் திகில் திரைப்படங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு .

தற்போது புதுமுக இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து தயாராகியுள்ள திரைப்படம் ‘பேய் இருக்க பயமேன்’ ‌ .

கதாநாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்.

ஆனால் இவரது தாயார் உடனடியாக திருமணம் செய்து வைக்கிறார்.

இருவருக்கும் விருப்பமே இல்லாமல் கதாநாயகி காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன் கார்த்தீஸ்வரன்.

அவர்கள் இருவரின் திருமணத்திற்கு பின்பு பேய் இருக்கும் பங்களாவில் என்றும் தெரிந்து கதாநாயகன் கார்த்தீஸ்வரன் கதாநாயகி காயத்ரி ரமா இருவரும் தேனிலவு செல்கிறார்கள்.

அங்கு இருக்கும் இரண்டு பேய்கள் கதாநாயகன் கார்த்தீஸ்வரன் கதாநாயகி காயத்ரி ரமா இருவருக்கும் பல்வேறு தொந்தரவு செய்கிறது.

இறுதியில் அந்த வீட்டில் இரண்டு பேர் பேயாக இருப்பது யார்?

எதற்காக இருவரும் பேயாக மாறினார்கள்?

கார்த்தீஸ்வரன் கதாநாயகி காயத்ரி ரமா இருவரும் பேயை எப்படி சமாளித்தார்கள்? என்பதே இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

தம்பதியாக ஹீரோ கார்த்தீஸ்வரனும், ஹீரோயின் காயத்ரி ரமாவும் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

விருப்பம் இல்லாத திருமணத்தால், எலியும், பூனையுமாக அவ்வபோது சண்டை போட்டுக்கொள்ளும் கணவன், மனைவி நகைச்சுவை கலாட்டா காட்சி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

கார்த்தீஸ்வரனின் காமெடி கலந்த காட்சிகளில் ராகவா லாரன்ஸ் பேல் நடித்திருப்பது பெரியதாக எடுபடவில்லை.

கதாநாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனும், கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரமாவும் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த இரண்டு பேய்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தம்பதியினருக்கு பேய்கள் என்றால் என்ன? என்ற புரிதல் கிடைக்க, அதன் மூலம் அவர்கள் இரண்டு பேய்களுக்கு பலவிதமான கஷ்ட்டங்களை கொடுக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பேய்களே பயந்து போகும் அளவுக்கு இவர்கள் கொடுக்கும் டார்ச்சர்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

போலி சாமியார் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளர் வரும் முத்துக்காளை நடிப்பில்
காமெடி என்ற பெயரில் படம் பார்க்கும் நம்மலை மிகவும் சோதிக்கிறார்.

நிஜ சாமியார் நெல்லை சிவா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

பேய்களாக நடித்திருக்கும் அர்ஜுன் நியதி இருவருக்கும் கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அபிமன்யுவும் ஒளிப்பதிவு சூப்பர்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளினும் கதைக்கு ஏற்ப பணிபுரிந்துள்ளார்கள்.

படத்தொகுப்பாளர் ஜிபி கார்த்திக் ராஜா, கத்திரிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலை கொடுத்திருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் முதல் பாதி படம் பார்க்கும் ரசிகர்களை சற்று கோபப்படுத்தினாலும்.

பேய் பயத்தை எப்படி போக்குவது என்ற விளக்கத்தை கொடுத்தப் பிறகு திரைக்கதை வேகம் எடுப்பதோடு திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

பேய் படங்கள் என்றாலே, அதில் பேய்களின் பின்னணியும், பழிவாங்கும் படலமும் இருப்பது தான் வழக்கமான கதையாக இருக்கும்

ஆனால், அந்த வழக்கமான பாதையில் பயணிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தை யோசித்திருக்கும் இயக்குநர் சி.கார்த்தீஸ்வரன்.

பேய் என்றால் என்ன? பேய் பயத்தை எப்படி போக்குவது? போன்ற விஷயங்களை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கும் முறை ரசிக்க வைக்கிறது.

திரைப்படத்தில் ‌மொத்தத்தில் குறைகள் சில நினைவுகள் பல.

ஒரு பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தியோடு, பேய் பயத்தை போக்கிய உணர்வையும் திரைப்படம் கொடுக்கிறது.