பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நெகடிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்கும் – நடிகர் விக்ரம் பிரபு.
பிரபலமான நாவல் பொன்னியின் செல்வன்’ தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்க ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை லைகா நிறுவனம் உருவாக்குகிறது.
இதில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இப்படி முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.
கிட்டதட்ட முக்கியமான கேரக்டர்களில் மட்டும் 27 பேர் நடிக்கிறார்களாம்.
இந்த நிலையில் விக்ரம் பிரபு நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.