உலகநாயகன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளார்.
சென்னை 05 ஜூன் 2021
உலகநாயகன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
.நடிகர் கமலின் 232 வது திரைப்படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த விக்ரம் திரைப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
கொரோனா பரவல் குறைந்த பின்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில், கைதி மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ்.
இந்த விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.











