மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபலம்

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா உள்பட பலர் நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்நிலையில், இந்த படத்தில் சாந்தனுவும், ‘வேலையில்லா பட்டாதாரி’ படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதனும் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.