Saturday, August 15
Shadow

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய உலக நாயகன் கமல்ஹாசன்.

சண்டை பயிற்சி கலைஞராக இருந்து தமிழ் திரைப்பட உலகில் மிக பெரிய வில்லன் நடிகராக உயர்ந்தவர் நடிகர் பொன்னம்பலம்.

நடிகர் உலக நாயகன் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் வெற்றி விழா இந்தியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததின் மூலம் நடிப்பையும் தாண்டி சிறந்த நண்பராகவும் பழகி வந்தவர் நடிகர் பொன்னம்பலம்.

மேலும் 80-90 வெளிவந்து வெற்றி பெற்ற முத்து நாட்டாமை உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

ஏராளமான தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் மற்றும்  காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

இவர் மீது வேண்டும் என்றே சில பழிகள் போடப்பட்டாலும் இவரை மக்கள் அனைவரும் பல முறை காப்பாற்றினர்.

வில்லனாகவே பார்க்கப்பட்ட இவரை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த பிக்பாஸ் சீசன் 3
நிகழ்ச்சி அமைந்தது.

அமைதியாக விளையாடியதால் சுவாரஸ்யமாக இவரால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை.

எனவே கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு சில புதிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்தாலும் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் சென்னையில் மனைவி மகள் மகனுடன் வாழ்ந்து வரும் இவருக்கு திடீர் என, சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சென்னை அடையாறில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிகிச்சைக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அனைத்து தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

மற்றும் வில்லன் நடிகர் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு  நலம் விசாரித்து வருகிறார்.

இதை அறிந்து நடிகர் கமலஹாசன் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து, அவருடைய குடும்ப சூழ்நிலை கருதி மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.