உலக நாயகனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை !*
கடந்த 2016ல் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்நிலையில் இந்த டைட்டேனியம் கம்பியை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசன் விறுவிறுப்பாக பணியாற்றியதால் கம்பியை நீக்கும் பணி தள்ளிப்போனதாகவும். தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











