இந்தியன் 2 திரைப்படத்தில் நடந்த விபத்து பற்றிய போலீஸ் விசாரணையில் உலக நாயகன் கமல்ஹாசன் என்ன சொன்னார்..?
கடந்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இயக்குனர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன்.
அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.
இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்.
இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடந்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.
இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்” எனத் கமல்ஹாசன் பேசினார்











