Monday, January 18
Shadow

மலையாள திரைப்பட உலகில் மிக பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் இயக்குனர் கே.ஆர். சச்சிதானந்தம் என்ற சச்சி இன்று காலமானார்.

மலையாள திரைப்பட உலகில் மிக பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கே.ஆர். சச்சிதானந்தம் என்ற சச்சி இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 48.பிரபல மலையாள இயக்குநரான கே.ஆர். சச்சிதானந்தம் என்கிற சச்சி, சில படங்களில் இணை கதாசிரியராகப பணியாற்றியுள்ளார்.கதாசிரியர் தயாரிப்பாளர் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி

அவருடைய முதல் திரைப்படமாக அனார்கலி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அவரது இயக்கத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் இரண்டாவது திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.லாக்டவுனுக்கு முன்பு வரை அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்பட உலகில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் பேசப்பட்டது.

இந்த திரைப்படத்தில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இவருக்கு வயது 48 இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அதனால் ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி அங்கு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.

அவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இறப்புக்கு மலையாள திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CLOSE
CLOSE