இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய அய்யப்பனும் கோஷியும். திரைப்படத்திற்கு போட்டி ஏற்பட்டுள்ளது.!

மலையாளத்தில் சூப்பர் டுப்பர் ஹிட்டான திரைப்படம்தான் அய்யப்பனும் கோஷியும்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியானது சாஷி இயக்கிய இந்த திரைப்படத்தில் அய்யப்பனாக பீஜூ மேனனும் கோஷியாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார்கள்.

இரண்டு ராணுவ இது அதிகாரிகளின் இடையிலான ஏற்படும் ஈகோ மோதலை வைத்து எதார்த்தமாக இந்த திரைப்படத்தில் சொல்லியிருந்தனர்.

இந்த திரைப்படத்தை பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழில் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் திரைப்படத்தை தயாரித்த கதிரேசன் அவர்கள் வாங்கியுள்ளனர்.

தெலுங்கு ரீமேக்கான உரிமையை தயாரிப்பாளர் சூரியதேவர நாகவம்சி வாங்கியுள்ளாராம்.

இவர் ஜெர்சி அலா வைகுண்டபுரலு‌ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் திரைப்படத்தில் நடித்த பீஜூ மேனன் வேடத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவையும் பிரித்திவிராஜ் நடித்த வேடத்தில் ராணா ரகுபதி ஐயும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

error: Content is protected !!