நடிகர் இயக்குனர் விசு அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் இயக்குனர் விசு அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 73

மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விசு அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

விசு நடித்த முதல்படம் ரஜினிகாந்தின் தில்லு முல்லு அந்த திரைப்படத்தில் இவர் டப்பிங்கும் பேசியுள்ளார்..

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதற்குப் பின்னர் கண்மணி பூங்கா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகமாகினார்.

அவர் மேலும் இயக்கிய மணல் கயிறு,
டௌரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், வாய்ச்சொல்லில் வீரனடி, நாணயம் இல்லாத நாணயம், அவள் சுமங்கலிதான், கெட்டிமேளம்,
சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

விசு அவர்கள் இயக்குனர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர், என தமிழ் திரைப்பட உலகில் மிக திறமை வாய்ந்தவர். என சொல்லலாம்.

இவர் 1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். திரைப்படம் அல்லாமல் மேடை நாடகம் தொலைக்காட்சி தொடர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விசு. என கடைசி காலம் வரை பணியாற்றி வந்தவர்.

குடும்ப கதைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துடன் மன்னன் உழைப்பாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நெற்றிக்கண் படத்தின் கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்த நிலையில் தற்போது அந்தப் படத்தை தனுஷின் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் அறிந்து அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விசுவிற்கு உமா  என்கின்ற மனைவியும் 3 மகள்கள் லாவண்யா, சங்கீதா, கல்பனா, ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்

இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகி விட்டனர்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை 5.30 மணிமணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதி சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும்.

இவரின் மறைவு தமிழ் திரைப்பட உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர், இயக்குனர். விசு வீட்டு முகவரி.

Flat no 3A , Block B1 , PRAPANCHA apts , Masha Kohl street ,Okkiyam Thoraipakkam, Chennai- 600097

error: Content is protected !!