மாஸ்டர் திரை விமர்சனம். ரேட்டிங் – 3/5

நடிகர் நடிகைகள் – தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மொகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சய், சேத்தன், மகேந்திரன், சாந்தனு, கவுரி கிஷான், தீனா, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, நாசர், ரமேஷ் திலக்
மற்றும் பலர்

தயாரிப்பு – XB பிலிம் கிரேட்டர்ஸ்

இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்.

படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்

இசை – அனிருத் ரவிச்சந்திரன்

மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது

திரைப்படம் வெளியான தேதி – 13 ஜனவரி 2021

ரேட்டிங் – 3/5

கடந்த வருடம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்த மாஸ்டர் திரைப்படம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தலால் காரணமாக மாஸ்டர் திரைப்படம் வெளி வருவது தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்போது 2021-ம் ஆண்டு அதாவது பொங்கல் முதல் நாள் பொகி பொங்கலுக்கு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளனர்

ஒரு கதை எழுதும்போதும ஒரு கதை உருவாகும்போது திரைக்கதையை அமைத்து முடிந்தபின்புதான் இந்தக் கதைக்கு அதற்குப் பொருத்தமான கதாநாயகர் கதாநாயகி தேர்வு செய்வார்கள்.

ஆனால் இந்த மாஸ்டர் திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகன் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிடைத்தவுடன் கதையை
முடிவு செய்திருப்பார் என்பது அந்த மாஸ்டர் திரைப்படத்தை பார்த்தாலே ரசிகர்களுக்கு புரியும்.

இதற்கு முன்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலும் வெற்றி பெற்ற திரைப்படங்கள்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் செம ஹிட் அடித்தது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு திரையில் வரும் மிகப் பெரிய திரைப்படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.

ஒரு மிக பெரிய தனியார் கல்லூரியில் இளம் பேராசிரியராக கதாநாயகன் விஜய் பணியில் சேருகிறார்.

பேராசிரியராக ஆக இருக்கும் கதாநாயகன் விஜய் மீது அந்த தனியார் கல்லூரியில்
படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வளவு பேரன்பு இருக்கிறது.

இந்த தனியார் கல்லூரியில் இளம் பேராசிரியராக இருக்கும் கதாநாயகன் விஜய் மீது மாணவர்கள் அவ்வளவு பேரன்பாக இருப்பது கல்லூரியில் உள்ள மற்ற பேராசிரியர்களுக்கு பிடிக்கவில்லை.

Read Also  கேப்மாரி திரை விமர்சனம்

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் பாத்திரத்தின் பெயர் ஜே.டி என்னும் ஜான் துரைராஜ். இவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்.

இந்த நிலையில் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலில் பிரச்சனை நடந்தால் கல்லூரியை விட்டு வெளியேறுகிறேன் என எழுதிக் கொடுக்க கல்லூரியில் நடக்கும் தேர்தலுக்குப்பின் இவர் பணிபுரியும் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனையால் கல்லூரியை வெளியேறுகிறார்.

அதன் பின்பு சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.

அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியை பவானி என்கிற விஜய்சேதுபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

அங்கு உள்ள சிறுவர்களை தனது சட்ட விரோத செயல்களுக்கு தயார் படுத்தி பயன்படுத்தி வருகிறார் வில்லன் விஜய் சேதுபதி.

அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வில்லன் விஜய் சேதுபதியால் இரண்டு சிறுவர்கள் தூக்கில் தொங்கவிட்ட படுகிறார்கள்.

அதைப் பார்த்த கதாநாயகன் விஜய் மனம் உடைந்து அவர் மதுவுக்கு அடிமையாக இருக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டு இரண்டு சிறுவர்களின் இறப்புக்கு யார் காரணமோ அவரை பழிவாங்க துடிக்கிறார்.

இதனால் கதாநாயகன் விஜய் விஜய் சேதுபதி இருவருக்கும் நடக்கும் மோதலில் கதாநாயகன் விஜய் வெற்றி பெற்றாரா இல்லை வில்லன் வீடியோ விஜய் சேதுபதி வெற்றி பெற்றாரா என்பதுதான் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் மீதிக்கதை.

கல்லூரி பேராசியராக இருந்தாலும் அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்கிறார் கதாநாயகன் விஜய்.

சமயங்களில் கல்லூரிக்கும் தள்ளாடிக் கொண்டே தான் வருகிறார்.

ஆனால், அவரை மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை சொல்லவேயில்லை.

போகிற போக்கில் வசனத்தில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

கதாநாயகன் விஜய் நாகர்கோவில் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் கதையே ஆரம்பமாகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரை இரண்டு சிறுவர்களின் கொலை மாற்றிவிடுகிறது.

அதன்பின் அந்த பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதே அவரின் வேலையாகிவிடுகிறது.

வழக்கமான விஜய்யை இரண்டு பாடல் காட்சிகளில் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

பேட்ட படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தையே மீண்டும் நினைவுபடுத்துகிறார் விஜய் சேதுபதி.

வில்லத்தனம் செய்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது.

நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் பற்றிய போஸ்டர்களில் விஜய்யும், விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக முறைத்துக் கொண்டு நிற்பது போலெல்லாம் காட்டினார்கள்.

ஆனால், கிளைமாக்சில் மட்டுமே இருவரும் மோதிக் கொள்கிறார்கள். அதற்கு முன்பு பார்த்துக் கொள்வது கூட இல்லை.

திரைப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன். பெரிய வேலை ஒன்றுமில்லை.

பல தமிழ்ப் படங்களில் பார்த்ததைப் போல கதாநாயகனுக்கு கொஞ்சம் உதவி செய்யும் கதாபாத்திரம், அப்பாவி மாணவர்ளைக் காப்பற்றத் துடிக்கும் ஒரு சமூக சேவகி. விஜய்யுடன் காதல் காட்சி கூட இல்லை, அவன் கண்ணப் பார்த்தாக்கா… என பின்னணியில் யுவன் பாட இவர் மட்டுமே காதலித்துக் கொள்கிறார்.

Read Also  அருவம் திரை விமர்சனம்

ஆண்ட்ரியாவெல்லாம் இந்தப் படத்தில் எதற்கு நடிக்க சம்மதித்தோம் என படத்தைப் பார்த்தபின் யோசிப்பார்.

மற்ற கதாபாத்திரங்களில் சூப்பர் சிங்கர் பூவையார் மட்டுமே கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.

சாந்தனு பாக்யராஜ், கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் நாசர் இப்படி பலர் ஆங்காங்கே ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

அனிருத் இசையில் பாடல்களை தனியாகக் கேட்பது ரசிக்க வைத்தது. படத்துடன் பார்க்கும் போது பொருத்தமில்லாத இடங்களில் வந்து போகிறது.

ஒரு ராவான படமாகக் காட்ட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் முயற்சி செய்துள்ளார்.

கல்லூரி, சீர்திருத்தப்பள்ளி என இரண்டே இரண்டு இடங்களில் முக்கவால்வாசி படம் நகர்கிறது. வேறு இடங்களைப் படத்தில் அதிகம் காட்டவேயில்லை.

விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் படத்தை தங்களுக்குத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம். மாநகரம், கைதி என தரமான படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர் வழியில் பயணிப்பதே நல்லது. பரீட்சார்த்த முயற்சிகளில் விஜய்யும் இறங்குவதைத் தவிர்க்கலாம்.

மாஸ்டர் – ஓகேதான்