தளபதி விஜய்யின் மாஸ்டர்’ திரைப்படத்தின் காட்சிகள் லீக் சோனியால் வந்த சோதனை..; படக்குழுவினர் அப்செட்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர்.
கடந்த வருடம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்த மாஸ்டர் திரைப்படம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.
கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தலால் காரணமாக மாஸ்டர் திரைப்படம் தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது 2021-ம் ஆண்டு அதாவது நாளை பொங்கலுக்கு திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையில் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உட்பட பல சமூக வலைதளங்களிலும் மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் பரவியது.
இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators..
.”மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி.
ஒரு நாள்தான் உள்ளது அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!” என்று ட்வீட் செய்துள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர்களுடன் மாளவிகா மோகனன் & மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழுவினர், திரையுலகினர் & இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்டர்நடெ் காட்சிகளை பகிராமல் புகார் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து லீக் செய்த நபர் குறித்த தகவல்கள் வந்தன.
சோனி டிஜிட்டல் நிறுவனத்திடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
காட்சிகள் லீக் தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார்.
அந்த நபரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனமும் படக்குழுவினர்க்கு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












