தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தை மிகப் பெரிய தொகைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.

சென்னை : 28 நவம்பர் 2020

தமிழ் திரையுலகிற்கு மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

எனவே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்த நிலையில் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என கூறியது.

எப்போது வெளியானாலும் மாஸ்டர் திரைப்படம் கொண்டாடாப்படும் என்று கூறினார் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனால் திரையரங்கில் தளபதி தரிசனத்திற்கு ரசிகர்கள் அனைவரும் தயாராக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் மிக பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாம்.

இது தொடர்பான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

error: Content is protected !!