மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ‘கைதி’. தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 25ம் தேதி வெளியாகவுள்ள ‘கைதி’ தெலுங்குப் பதிப்பை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள ஹரி படத்துக்காகத் தயாராகி வருகிறார். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பார்” என்று கூறினார். இதன் மூலம் சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.