ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவுக்காக அருவாவை கையில்’ எடுக்கும் நடிகர் சூர்யா & இயக்குனர் ஹரி

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று அவரின் 38வது படமாகும்.

இதனையடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதை சிவா இயக்குவார் எனவும் படக்குழு அறிவித்தது.

ஆனால் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை சிவா இயக்க சென்றுவிட்டதால் சூர்யா மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 39-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன்.

இப்படத்திற்கு ‘அருவா’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொதுவாகவே இயக்குனர் ஹரி படங்களில் சுமோ மற்றும் அருவா இல்லாமல் இருக்காது. இப்போது டைட்டிலேயே அருவா உள்ளது. எனவே அதன் வீச்சு பலமாக இருக்கும் என நம்பலாம்.

இது நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம்.

இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!