இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனர்  செல்வராகவனுடன் போதும் நட்டி (எ) நட்ராஜ்.

சென்னை 11 ஏப்ரல் 2022 இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இயக்குனர்  செல்வராகவனுடன் போதும் நட்டி (எ) நட்ராஜ்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் ஜி.

தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் ‘திரௌபதி ருத்ரதாண்டவம் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து 3வது நிரைப்படத்தை இயக்க தயாராகி உள்ளார்.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்தில் இயக்குனர் செல்வராகவனை கதையின் நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதாக இயக்குனர் மோகன்ஜி அறிவித்தார்.

இந்த நிலையில் இதே திரைப்படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி (எ) நட்ராஜ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.

இயக்குனர் செல்வராகவன் உடன் நடிகர் நட்டி (எ) நடராஜ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும்  தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளார்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் நட்டி (எ) நடராஜ் வில்லனாக நடித்து ரசிகர்களின் மிக பெரிய பாராட்டைப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.