மீண்டும் திரைப்படங்களில் நடிக்க பிரபல நடிகை முடிவு
நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என சமூக வலைத்தளத்தில் அறிவுரை கேட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை குஷ்பூ மீண்டும் நடிக்க வேண்டும் என வரவேற்பு தெரிவித்தனர். இதனையடுத்து, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க குஷ்பூ முடிவு செய்துள்ளார்.