முதல்வர் எடப்பாடிக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு !
தமிழக அரசின் மேல்நிலை இரண்டாமாண்டு பாடநூலில்,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றிய தொகுப்பு இடம் பெற்றுள்ளது
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
என் இனிய தமிழ் மக்களே! உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு.
சிறந்த நடிப்புத் திறன் மூலம் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் தான் சந்தித்த அனுபவங்களை தொகுத்து, ‘சிதம்பர நினைவுகள்’ என்கின்ற நூலாக வெளியிட்டார்.
இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்பு திறன், அவரின் கலையுலக அனுபவங்கள், அவர் பெற்ற விருதுகள் என பல தகவல்களை எழுதியுள்ளார்
இதனை தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களை கொண்டு,
புதிதாக உருவாகியுள்ள பாடத்திட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பாடநூலில், திரு சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவரின் கலைத் திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும்,
அவரைப்பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்து சிறப்பித்த தமிழக அரசுக்கு திரைப்படத் துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில் கலையுலகம் சார்பாகவும் என் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா