முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பகீர் தகவல் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது.
ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாமிய மதம் மாற்றம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.
மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
https://twitter.com/Mysteri13472103/status/1279033129190125569?s=19
https://twitter.com/Mysteri13472103/status/1279033129190125569?s=19