Thursday, January 28
Shadow

மேதாவி திரைப்படத்தின் தயாரிப்பாளர் பெப்ஸி திரைப்பட தொழிலாளர்களுக்கு 25000 அரிசி மூட்டைகளை வழங்கினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதைப்போல் தமிழ் திரைப்பட தொழிலாளர்களும் வேலை இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேதாவி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சு.ராஜா அவர்கள் அரிசி மூட்டைகள் வழங்கியிருக்கிறார்.

இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் “மேதாவி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் சு.ராஜா, அவரது பிறந்த நாளில் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார்.

தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்க்கு ( பெப்சி ) திரைப்பட தொழிலாளர்களுக்காக 5kg கிலோ வீதம் 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000 kgs) திரைப்படத் தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அவர்களிடம் இன்று வழங்கி இருக்கிறார்

தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டை வழங்கிய நமது தயாரிப்பாளர் சு ராஜா அவர்களுக்கு
அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

CLOSE
CLOSE