தயாரிப்பாளர் K.J.R ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 முட்டைகள் அரிசி வழங்கி உள்ளார்:!

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை முடங்கியுள்ளது.

தினக்கூலியை நம்பி உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசும் மத்திய அரசும் தங்களால் முடிந்த பண உதவியையும் கொடுக்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில் வேலைகளை இழந்துள்ள நமது தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் உதவிட வேண்டும். என தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

கோரிக்கையை கேள்விப்பட்டவுடன் உடனடியாக தயாரிப்பாளர் கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ் திரு ராஜேஷ் அவர்கள் பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு 1 முட்டை 10 கிலோ வீதம் 1000 முட்டைகள் அரிசியை வழங்கி உள்ளார்.

தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நன்கொடை அளித்தவர்கள் அரிசி பருப்பு அளித்தவர்கள் அனைவர்களுக்கும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.