ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷ்யா ரகுநாத்

தன்னுடைய புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து பதிவு செய்திருக்கிறார் நடிகை திரிஷ்யா ரகுநாத்.

நடிகைகள் சமூகவலை தளங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. மலையாள நடிகை திரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கவர்ச்சியான ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர், ’உங்கள் இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள்? ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் திரிஷ்யா.

நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனாக சொல்லணும்ன்னா என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அது எல்லாம் உடலில் இயற்கையாக அமைந்தது. அதை ஒருபோதும் நான் வெளிக்காட்டவில்லை. முடிந்தவரை மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கோங்க.. நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என கோபமாக பதில் அளித்தார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!