ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் பட தயாரிப்பாளர்

நடிகர் அஜித் தற்போது நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கும் படமான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ திரைப்படம் சைனாவில் சமீபத்தில் வெளியாகியது இந்த திரைப்படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் 100 கோடி வசூல் ஆகி உள்ளதாக கூறுகிறார்கள். இதனை ரசிகர்கள் #SrideviScoresCentury என்ற ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து உள்ளார்கள். இதனை கவனித்த போனி கபூர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.