Sunday, July 12
Shadow

ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜா வை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள்? மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதிலடி.

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஷாஃப்ரூன் நிஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

நேற்று (மே 27) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

நிறைய ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜா வை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள்? என கேட்டனர்.

இசைஞானி இளையராஜா மகனை மாற்றிவிட்டீர்கள்? நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என பல கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன்.

எங்கள் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் யுவன் சங்கர் ராஜா அவருக்கு இஸ்லாம் பிடித்துவிட்டது.

அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும். அவருடைய தேடலுக்கான விடைகள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என பதிலளித்துள்ளார்.