ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் மும்பையை பின்னணியாகக் கொண்டுள்ளது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர்கள் பிரதீக் பாப்பர், ஜதின் சாமா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட் மூத்த நடிகர் தலிப் தாஹில் ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். இவர், சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.