சிம்புவுவின் திருமணத்திற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் – நடிகர் கூல் சுரேஷ்

டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்குப் பின்னர் அனைவரின் கேள்வி சிம்புவின் திருமணம் எப்போது என்பதுதான். அதே போல சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற கேள்வியும் இருக்கிறது.

இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். இவர் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நண்பரான சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர், டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.

அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? எப்போது கல்யாணம் என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினார்

CLOSE
CLOSE
error: Content is protected !!